News April 29, 2024

ராணிப்பேட்டையில் டாஸ்மாக் கடை மூடல்

image

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். குறிப்பாக ஸ்டார் ஹோட்டல்கள், பார்கள் மூடி வைக்கப்படும். சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

ராணிப்பேட்டையில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நாளை பிப்-14 தேதி காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் பெயர் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் செய்யப்படும். இதுதவிர பொது பொது விநியோக திட்ட தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

ராணிப்பேட்டை: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

ராணிப்பேட்டை மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 13, 2026

தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தில் நாய் பயிற்சி நிறைவு விழா

image

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தில் நேற்று (பிப்.12) நாய் பயிற்சி பள்ளி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த நாய் அணிகள் மற்றும் கையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேரிடர் நேரங்களில் தேடுதல், மீட்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்று பாராட்டினர்.

error: Content is protected !!