News December 17, 2025

புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

image

பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 12, 2026

புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

புதுவை முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு

image

புதுச்சேரி செவிலியர் நலசங்கம் சார்பில், செவிலியர் பதவி உயர்வு & அரசு மருத்துவ மனைகளில் உள்ள காலி நிரப்ப பணியிடங்களை கோரி சங்கத் தலைவர் சாந்தி, அனுராதா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் திலகா, நிர்வாகிகள் காந்திமதி, ராசாயி, சுமதி, கவிதா, கவுரவ செயலாளர் ஜானகி ஆகியோர் சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

News January 12, 2026

புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் முக்கிய அறிவிப்பு

image

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி வெளியிட்டுள்ள செய்தியில், அரசின் செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் காங்கிரஸ் சாா்பில், வரும் 21-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை புதுச்சேரிக்கான நடைப்பயணம் நடத்தப்பட உள்ளது. இதில் அகில இந்திய மற்றும் பல்வேறு மாநிலத் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா். வரும் 21 ஆம் தேதி முத்தியால்பேட்டையில் தொடங்கப்படும் என்றார்.

error: Content is protected !!