News December 17, 2025
தேனி: டிச.19 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற டிச.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தகவல்.
Similar News
News December 25, 2025
வாக்காளர் சிறப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் மூலம் வரக்கூடிய 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய இரண்டு நாட்களில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர், முகவரி திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் கூறியுள்ளார்.
News December 25, 2025
தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
இந்த தகவலை தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 25, 2025
தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 3 பேர் படுகாயம்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (63). நேற்று முன் தினம் இவர் இவரது மகள் மற்றும் பேத்தி ஆகியோர் அழகுராஜா என்பவரது ஆட்டோவில் தேனி நோக்கி சென்றுள்ளனர். லட்சுமிபுரம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


