News April 29, 2024
33% ஐஐடி மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை

கரக்பூர் ஐஐடியில் கடந்த ஆண்டு பயின்ற 33% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையென ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த 2,256 பேரில், 1,615 பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் 2022-23ஆம் ஆண்டில் 2,490 பேரில் 1,675 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. ஆண்டுச் சராசரி சம்பளம் 2021-22இல் ரூ.16 லட்சமும், 2022-23இல் ரூ.18 லட்சமும் பெற்றுள்ளனர்.
Similar News
News August 15, 2025
அரங்கம் அதிர வைத்த ‘கூலி’ முதல் நாள் வசூல்!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், படத்தின் வசூலை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்த படம் முதல் நாளில் மட்டும் ₹151 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளில் தமிழ் படம் ஒன்றின் அதிகபட்ச வசூல் இதுவே. நீங்க படம் பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?
News August 15, 2025
CINEMA ROUNDUP: செப்.5-ம் தேதி வெளியாகும் ‘காந்தி கண்ணாடி’

◆உலக சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘சிசு’ படத்தின் 2-ம் பாகம் வரும் நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
◆நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘Dear Students’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
◆KPY பாலா ஹீரோவாக நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில்தான், SK-ன் ‘மதராஸி’ படமும் வெளிவருகிறது.
News August 15, 2025
நாளை விடுமுறை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் ரத்து

நாளை கோகுலாஷ்டமி என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சனிக்கிழமை(ஆக.23), 38 மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. SHARE IT.