News December 16, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து போராட்டம்: திருமா

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தங்களுக்கு வேண்டிய நீதிபதியை வைத்து மதவெறி கும்பல் பிரச்னையை கிளப்பியுள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். RSS, பாஜக ஆதரவு நபர்களை நீதிபதிகளாக நியமித்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்புகளை மோடி அரசு வழங்க செய்கிறது. எனவே, கொலிஜியம் முறையை மாற்றவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்தும் வரும் 22-ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 21, 2025

செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. களமிறங்கும் KK செல்வம்

image

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு எதிராக அவரது அண்ணன் மகன் KK செல்வத்தை வைத்து EPS காய் நகர்த்தி வருகிறாராம். கோபி தொகுதியில் செங்கோட்டையனை தோற்கடிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோபியில் அதிமுக சார்பில் போட்டியிட KK செல்வம் விருப்ப மனு அளித்துள்ளார். சொந்த அண்ணன் மகனே தனக்கு எதிராக நிற்பது செங்கோட்டையனுக்கு தலைவலியாக மாறியிருக்கிறதாம்.

News December 21, 2025

‘வா வாத்தியார்’ வரமாட்டாரா?

image

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த கார்த்தியின் ’வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் பொங்கல் விடுமுறைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிச.5-ம் தேதி வெளியாக இருந்த இப்படம், நீதிமன்ற வழக்கு காரணமாக 12-ம் தேதிக்கும், பின்னர் 24-ம் தேதிக்கும் படக்குழு மாற்றியது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான SC தீர்ப்பை தொடர்ந்து படத்தின் ரிலீஸை படக்குழு 2026-க்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

News December 21, 2025

3 நாள்கள் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, டிச.25-ல் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், டிச.26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், டிச.24 வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் அதிகாலை, இரவு நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!