News April 29, 2024
காரமடையில் 40 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசம்

கோவை காரமடையை அடுத்த சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட திருமா நகர் பகுதியில் இன்று (ஏப்ரல்.29) 40க்கும் மேற்பட்ட குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து காரமடை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 25, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.25) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News August 25, 2025
மருதமலை முருகன் கோயில்.! நோய் தீர்க்கும் விபூதி.!

கோவை, மருதமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும், தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள். மக்களே SHARE பண்ணுங்க!
News August 25, 2025
ஆகமவிதிகளை புறம்தள்ளி அருளும் ஈச்சனாரி விநாயகர்.!

ஆகம விதிகளின்படி மதியம் 2மணி முதல் 4மணி வரை நடை கோயில்களில் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை ஈச்சனாரி விநாயகர் ஆகம விதிகளை புறம்தள்ளி காலை 5மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அருள் பாலிக்கிறர். இங்கு வழிப்பட்டால் வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்திக்கு இந்த கோயிலுக்கு போங்க. இதை மற்ற பக்தர்ளுக்கு ஷேர் பண்ணுங்க.