News April 29, 2024

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசை விமர்சித்த அன்புமணி

image

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு அமைதி காப்பதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதைத் தடுக்க தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, ஆன் லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

Similar News

News February 3, 2026

CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மின்னலே’

image

*காதலர் தினத்தையொட்டி மாதவனின் ‘மின்னலே’ படம் பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘லக்கி தி சூப்பர்ஸ்டார்’ பிப்.20 முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *’துரந்தர் 2′ அப்டேட் இன்று 12:12 மணிக்கு வெளியாகிறது *ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள ‘பீகி பீகி’ ஆல்பம் யூடியூப்பில் வெளியானது

News February 3, 2026

பிரிவினைவாத மனநிலையில் ஸ்டாலின் பேச்சு: FM

image

ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் போர் நடப்பதாக CM ஸ்டாலின் கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலினின் பேச்சு முழுக்க முழுக்க பிரிவினைவாத மனநிலை கொண்டவர்களின் எண்ணம் எனக்கூறிய அவர், பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியது வருந்தத்தக்க விமர்சனம் என்றார். அதிவேக ரயில்கள், சிறப்பு வேளாண் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு பயனளிக்காதா எனவும் கேள்வி எழுப்பினார்.

News February 3, 2026

SPORTS 360°: ஸ்குவாஷில் அனாஹத் சிங் சாம்பியன்

image

*WPL எலிமினேட்டரில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இன்று பலப்பரீட்சை *காயம் காரணமாக ஆசிய டீம் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் இருந்து பி.வி.சிந்து விலகல் *PSA ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் *U19 SAFF சாம்பியன்ஷிப் கால்பந்தில், இந்தியாவை 0-2 என்ற கோல் கணக்கில் வங்கதேசம் வீழ்த்தியது *ISL கால்பந்து தொடரின் ஸ்ட்ரீமிங் உரிமத்தை ₹8.62 கோடிக்கு FANCODE பெற்றுள்ளது

error: Content is protected !!