News December 16, 2025

பதிரனாவை ₹18 கோடிக்கு தூக்கிய KKR

image

2026 IPL AUCTION: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை ₹18 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. CSK அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை, அந்த அணியே இன்றைய ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. டெல்லியும், லக்னோவும் போட்டி போட்டு ஏலம் கேட்ட நிலையில், கடைசியில் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

Similar News

News December 22, 2025

திமுக அரசு இந்து எதிர்ப்பு ஆட்சி நடத்துகிறது: H ராஜா

image

தமிழகத்தில் தற்போது இந்து எதிர்ப்பு ஆட்சியே நடக்கிறது என்று H ராஜா விமர்சித்துள்ளார். கோயில் சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை பெருமளவில் கொள்ளையடித்துள்ளது என குற்றஞ்சாட்டிய அவர், திருச்செந்தூர் உள்பட பல கோயில்களில் முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றார். முருகனுக்கு எதிரான அரசை நடத்தும் இவர்களுக்கு, 2026 தேர்தலில் முருக பக்தர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் சாடினார்.

News December 22, 2025

மத்திய பட்ஜெட்டில் உங்கள் ஐடியாக்களை கூறலாம்!

image

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026 – 2027, அடுத்த ஆண்டு பிப்.1-ல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் 2026-27-ல் வரவேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை பகிரலாம் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் கருத்துகள் மூலம் பங்களிக்க விரும்புவோர், இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவிடுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

CM விவகாரத்தை அவர்களே தீர்க்க வேண்டும்: கார்கே

image

கர்நாடக CM இருக்கைக்கான மோதல்போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காங்., மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று CM சித்தராமையா & DCM சிவக்குமார் என இருவருமே கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில தலைவர்களே பேசி தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்., தேசிய தலைவர் கார்கே கூறியுள்ளார். இதனால் விரைவில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

error: Content is protected !!