News December 16, 2025

வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் PHOTOS

image

இந்திய ரயில்வே, முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பாட்னா–டெல்லி ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு, சுமார் 1,000 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடக்கும். இந்த ரயில், 16 பெட்டிகளுடன் மொத்தம் 827 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும். மேலே உள்ள ஸ்லீப்பர் ரயிலின் போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

Similar News

News December 22, 2025

பொங்கலுக்கு ரூ.5000 வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!

image

சேலம் எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வைத்த கோரிக்கையை தான் அ.தி.மு.க. தற்போது வைக்கிறது. த.வெ.க.வை கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க.வின் நிலைப்பாடு திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார்.

News December 22, 2025

BREAKING: அதிரடி கைது.. தமிழகத்தில் அடுத்த சர்ச்சை

image

இலங்கைக்கு ₹6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தியதாக இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஆனந்தராஜ், முருகன் ஆகியோரையும் கைது செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் விவகாரத்தை இந்து மக்கள் கட்சி கையில் எடுத்த நிலையில், ரவிச்சந்திரன் விவகாரத்தை திமுக விமர்சித்து வருகிறது.

News December 22, 2025

கூட்டணிக்கு அழைப்பு.. முடிவை கூறியது தவெக

image

திமுகவை வீழ்த்த NDA கூட்டணியில் தவெக இணையவேண்டும் என தமிழருவி மணியன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அந்த அழைப்பை தவெகவின் அருண்ராஜ் நிராகரித்துள்ளார். தமிழருவி மணியன் கூறியது அவருடைய கருத்து என கூறிய அவர், தங்களுக்கு அவரது அறிவுரை தேவையில்லை என பதிலளித்துள்ளார். மேலும் யாருக்கு அறிவுரை தேவையோ அவருக்கு கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!