News December 16, 2025
IPL AUCTION: புறக்கணிக்கப்பட்ட வீரர்கள்

அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் செட்டில், பேட்ஸ்மென்களுக்கான ஏலம் நடந்தது. இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 உள்நாட்டு வீரர்கள் என 4 பேரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. ஆஸி., வீரர் ஜேக் பிரேஸர் மெக்குர்க், நியூஸி., வீரர் டெவான் கான்வே மற்றும் உள்நாட்டு வீரர்களான பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் ஆகியோர் விலை போகவில்லை.
Similar News
News December 21, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை வரும் புதன்கிழமையுடன் தொடங்கவுள்ளது. டிச.10-ல் தொடங்கிய தேர்வுகள் நாளை மறுநாளுடன் நிறைவடைகின்றன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல <<18633529>>சிறப்பு பஸ்களும்<<>> இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. SHARE IT.
News December 21, 2025
புதிய ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. HAPPY NEWS

பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட இருப்பதால், எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும் என புதிதாக விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 21 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளனர். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும்.
News December 21, 2025
பாஜக கண்ணாடி வழியே RSS-ஐ பார்க்க வேண்டாம்: மோகன்

பாஜக எனும் கண்ணாடி வழியே RSS-ஐ பார்க்கும் போக்கு பலருக்கும் உள்ளது; ஆனால் இது தவறான புரிதலை ஏற்படுத்தும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சங்கத்தை புரிந்து கொள்ள விரும்பினால், பிற அமைப்புகளுடன் ஒப்பீடு செய்வது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். மேலும், RSS-ஐ பாஜகவுடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பேசுவதையும் அவர் எதிர்த்துள்ளார்.


