News December 16, 2025
₹25.20 கோடி.. கிரீனை தட்டித் தூக்கிய KKR

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். சென்னையும், கொல்கத்தாவும் அவரை வாங்குவதற்கு மல்லுக்கட்டியதால் அவரது ஏலத்தொகை ₹2 கோடியில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ₹43.40 கோடி வைத்திருந்த போதிலும், ₹25 கோடிக்கு பிறகு ஏலம் கேட்பதை CSK நிறுத்தியது. இதையடுத்து ₹25.20 கோடிக்கு அவரை KKR ஏலம் எடுத்தது. இதனால் CSK ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
ஒரே வீட்டில் 44 பேர் எரித்து கொலை.. ஓயாத ஓலம்

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
News December 25, 2025
கிறிஸ்துமஸ் வழிபாட்டில் PM மோடி

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, டெல்லி ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் PM மோடி பங்கேற்றார். இதுபற்றிய அவரது X பதிவில், கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டது அன்பு, அமைதி, கருணை எனும் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளின் உணர்வுகள், சமூகத்தில் நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முக்கிய முடிவு

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


