News December 16, 2025
மயிலாடுதுறை: வேளாண்மை இயக்குனர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே மேலாநல்லூர், பொன்மாசநல்லூர், கீழ மருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் தற்போது பெய்த கனமழையால், சேதமடைந்த சம்பா தாளடி நெற்பயிர்களை, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வேளாண்மை இணை இயக்குனர் விஜயராகவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெற்பயிர்கள் சேதம் தொடர்பாக நடைபெறும் கணக்கெடுப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
Similar News
News December 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது முகப்பு பக்கத்தை லாக் செய்து உபயோகிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தை லாக் செய்ய தவறும் பட்சத்தில், தங்களது முகநூலை ஹேக் செய்து மெசஞ்சர் மூலம் கணக்கில் உள்ள நண்பர்களிடம் பண மோசடியில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
மயிலாடுதுறை: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய மயிலாடுதுறை மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. (<<18660239>>தொடர்ச்சி<<>>)
News December 24, 2025
அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.


