News December 16, 2025

அரியலூர்: தீப்பற்றி எரிந்த பேருந்தின் சக்கரம்

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உடையார்பாளையம் ஆலம்பள்ளம் கிராமத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்தில், பின்பக்க டயர் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் உரசியதால் டயர் தீப்பிடித்து எரிந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Similar News

News December 30, 2025

அரியலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

image

அரியலூர் மாவட்டம் காமரசவள்ளியில் அமைந்துள்ள கார்கோடேஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான கார்கோடேஸ்வரருக்கு, பாலபிஷேகம் செய்து,புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 30, 2025

அரியலூர்: மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

அரியலூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்

image

அரியலூர் மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று வருகை தந்து உள்ளார். இதனை அடுத்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

error: Content is protected !!