News December 16, 2025

கள்ளக்குறிச்சி: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

image

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் செய்து<<>> Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News December 26, 2025

கள்ளக்குறிச்சி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

image

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு கள்ளக்குறிச்சி நேபால் தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கன்னிமரியாள், சூசையப்பர், குழந்தை ஏசு, மூன்று ஞானிகள் குடிலில் எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்துடன் வந்து வழிபட்டனர்.

News December 26, 2025

“விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர்” – ம.தி.மு.க நிர்வாகி காட்டம்

image

உளுந்துார்பேட்டையில் ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் செந்திலதிபன் பங்கேற்று, சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது, “த.வெ.க., தலைவர் விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர், பிறர் எழுதிக்கொடுக்கும் வசனத்தை பேசி பழக்கப்பட்டவர். போக, போக அவர் யார் என தெரியும், விஜயின் சாயம் வெளுக்கும்” என்று பேசினார்.

News December 26, 2025

கள்ளக்குறிச்சி வாக்காளர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 2026-ஜனவரி 1-ல் 18 வயது நிறைவடையும் முதல் முறை வாக்காளர்கள், தங்களது பெயரை சேர்க்க அல்லது பெயர், உறவுமுறை, முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் பொருட்டு படிவங்கள் பெற வரும் 27, 28 ம் தேதி, வரும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!