News December 16, 2025

தருமபுரி: Phone pay Gpay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

தருமபுரி: 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!

image

பொம்மிடி அருகே, 8-ஆம் வகுப்பு மாணவி கடைக்கு சென்றுள்ளார், அப்போது கடையில் இருந்த நந்தகுமார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் பள்ளி வந்த மாணவிக்கு போலீசார் போக்கஸோ குறித்து விழிப்புணர்வு நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு வந்த மாணவி 1098 எண்ணிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்து நந்தகுமாரை போக்ஸோவில் கைது செய்தனர்.

News December 26, 2025

தருமபுரி: கார்- பைக் மோதி பயங்கர விபத்து!

image

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஜங்காலஅள்ளியை சேர்ந்த சேரன் (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (32) மோட்டார் சைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதை ஏற்பட்ட விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஓட்டி வந்த ஜான்சன் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

image

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!