News April 29, 2024
தர்மபுரி நேற்றைய வெப்பநிலை விவரம்

தர்மபுரியில் நேற்று (ஏப்.28) 106.16 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
டிராக்டரில் சென்றவர் உயிரிழப்பு

காரிமங்கலம் அடுத்த திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி திப்பம்பட்டி சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News August 24, 2025
தருமபுரி அருகே இளைஞர் போக்சோவில் கைது

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் போக்சோ வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கண்மலர்-நடராஜ் மகன் விணுலோகேஸ்வரன் அதே பள்ளியில் பயிலும், 9 வகுப்பு வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். தகாத முறைகளில் பேசியும் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
News August 24, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து செல்லும் காவலர்கள் இரு பாதியாக பிரிக்கப்பட்டு முதல் பாதி விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக K. பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் முரளி, பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க