News April 29, 2024
கரூர் நேற்றைய வெப்பநிலை விவரம்

கரூரில் நேற்று (ஏப்.28) 104.36 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
தக்காளி விலை திடீர் உயர்வு

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால்,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.
News August 23, 2025
கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News August 23, 2025
கரூர்: இளைஞர்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி

கரூர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாட்கோ நிறுவனத்தின் மூலம், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 4 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி காலத்தில் சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இங்கு <