News December 16, 2025
தென்காசி: முயல் வேட்டை.. 5 பேர் அதிரடி கைது!

ஆலங்குளம் ஏந்தலூா் கிராமப்பகுதியில் வனச்சரக அலுவலா் தலைமையிலான குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் 5 நாய்களுடன் முயல் வேட்டையாடிய வீராணத்தை சோ்ந்த ஜெயக்குமாா், முத்துக்குமாா், ஆனந்த், அருண்குமாா் மற்றும் பரமசிவன் ஆகியோா் பிடிபட்டனா். இவர்களிடம் ஆட்டோ, நாய்கள், இறந்த நிலையில் முயல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 5 போ் மீதும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர்.
Similar News
News December 30, 2025
BREAKING: வாசுதேவநல்லூர் MLA-வுக்கு 2 ஆண்டு சிறை

நிதி நிறுவனம் ஒன்றில் 2016ல் பெற்ற ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 2 காசோலைகளும் பணமின்றி திரும்பியதாக நிதி நிறுவனம் தரப்பில் வாசுதேவநல்லூர் மதிமுக MLA சதன் திருமலைகுமாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில் MLA-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை வெளியீடு – கலெக்டர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.12.2025) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் (District Lead Bank) சார்பில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் நபார்டு (NABARD) வங்கியின் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார்.
News December 30, 2025
தென்காசி மக்களே… நாளையே கடைசி…!

தென்காசி மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை இங்கே <


