News December 16, 2025
BREAKING: இந்திய அணி பேட்டிங்

மலேசியாவுக்கு எதிரான U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. குரூப் ஸ்டேஜில், ஏற்கெனவே UAE-க்கு எதிராக 234 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானுக்கு எதிராக 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இது சம்பிரதாய மோதலாக இருந்தாலும், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
Similar News
News December 21, 2025
நீங்க பெயரை நீக்கினா என்ன? நாங்க வைப்போம்

100 நாள் வேலை திட்டத்தில், <<18603421>>காந்தியின்<<>> பெயரை மத்திய அரசு நீக்கியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், மே.வங்க CM மம்தா பானர்ஜி, மாநில வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ‘மகாத்மா ஸ்ரீ’ என பெயர் மாற்றம் செய்துள்ளார். தேசத்தந்தையை மதிக்கத் தெரியாதவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என அவர் கூறியுள்ளார். மத்திய அரசு நிதி தர மறுத்தாலும், மாநில அரசின் பணத்திலேயே வேலை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 21, 2025
U19 ஆசியகோப்பை ஃபைனல்: இந்தியா பவுலிங்

பாகிஸ்தானுக்கு எதிரான U19 ஆசியக்கோப்பை ஃபைனலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய பிளேயிங் XI: ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் வர்கீஸ், விஹான் மல்கோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் அபிஷேக் குண்டு, கனிஷ்க் சவுகான், கிலன் படேல், ஹெனில் படேல், தீபேஷ் தேவேந்திரன், கிஷான் குமார் சிங். 9-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்திய இளம் படை?
News December 21, 2025
நடக்கும் மரங்கள் தெரியுமா?

ஓரிடத்தில் வேரூன்றி நிலையாக நிற்பவையே மரங்கள். ஆனால், தென் அமெரிக்க காடுகளில் உள்ள Walking Palm மரங்கள், சூரிய ஒளியை தேடி மெல்ல மெல்ல இடம் பெயர்கின்றன! இதன் வேர்கள் தரையிலிருந்து உயர்ந்து கால்கள் போல இருக்கும். இவை, தனக்கு தேவையான சூரிய வெளிச்சம் உள்ள திசையில் புதிய வேர்களை வளர்த்து, பழைய வேர்களை உதிர்த்துவிடும். இப்படி ஒரு வருடத்தில் சில மீட்டர் தூரம் வரை இவை நகர்ந்து (நடந்து) செல்கின்றன!


