News December 16, 2025
TVK சின்னம் 15 நிமிடங்களில் உலகப்புகழ் பெறும்: ஆனந்த்

உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வரும் தவெக, தேர்தல் சார்ந்த பணிகளிலும் மும்முரம் காட்டி வருகிறது. இதனிடையே, விசில், பேட், வெற்றி கோப்பை, மோதிரம் போன்ற சின்னங்கள் தவெக பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தவெகவின் சின்னம் பற்றிய தகவல்கள் வெளிவரும் 15 நிமிடங்களில் உலகப்புகழ் பெறும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்படி என்ன சின்னமா இருக்கும்?
Similar News
News March 7, 2026
விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
News March 7, 2026
BREAKING: ₹2,300 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்தார்

TN அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ₹1,000-லிருந்து ₹1,500 ஆகவும், நடுநிலைப்பள்ளியில் பணிபுரிவோருக்கு ₹1,500-லிருந்து ₹2,300 ஆகவும் ஊதிய உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 38,000 பேர் பயனடைவார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
News March 7, 2026
மனைவி, மகளை விரட்டிவிட்டு.. விஜய்யை சாடிய இயக்குநர்

தவெக சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவை இயக்குநர் அமீர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த அவர், மனைவி, மகள் இருவரையும் வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சாடியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டிருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.


