News December 16, 2025
சிவகங்கையில் 12,000 காலியிடங்கள்! கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரும் டிச.20 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 90 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 12 ஆயிரம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். தொடர்புக்கு -8056501556. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
Similar News
News December 18, 2025
சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததால் விபத்து.. பரிதாப பலி!

வேலுந்தான் வயல் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலுச்சாமி சம்பவத்தன்று சுக்ரப்பட்டி – களத்தூர் சந்திப்பு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே வந்தது. இதனால், திடீரென பிரேக் அடித்தபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றின் நேற்று வேலுச்சாமி உயிரிழந்தார்.
News December 18, 2025
சிவகங்கை: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

சிவகங்கை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 18, 2025
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இராமேஸ்வரம் – சென்னை இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜன.13 அன்று இராமேஸ்வரத்திலிருந்து கொடியசைத்து துவங்கி வைக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த ரயில் சேவை துவங்கினால் இராமேஸ்வரத்தில் இருந்து, சென்னை 7 மணி நேரத்தில் பயணிக்கலாம்.


