News December 16, 2025
தருமபுரி: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான கருத்துகளை கூறி பயனடையுமாறு ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
தருமபுரி: தூக்கில் பிணமாக தொங்கிய +2 மாணவன்!

நல்லம்பள்ளி அடுத்த தண்டுக்காரம்பட்டியைச் சேர்ந்த பிரணீத்குமார் (17). பிளஸ்-2 மாணவரான இவர், அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் மாணவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார், உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 28, 2025
தருமபுரி: 2வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி!

கடத்தூர் அருகே நல்லகுட்லஅள்ளி கிராமத்தில், கட்டிட மேஸ்திரி கோவிந்தசாமியின் 2 வயது பெண் குழந்தை சுவாதி, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. தேடிப் பார்த்தபோது, பக்கத்து வீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்து கிடந்தது தெரிந்தது. குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 28, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.28) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜ், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்!


