News December 16, 2025
தஞ்சையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வடவாறு பாலம் அருகே சுற்றித் திரிந்த திவாகர், புருஷோத்தமன், ஷ்யாம் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 21, 2025
தஞ்சை: போலி கணக்கு – போலீசார் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பெயரில் போலியான Facebook முகநூல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த முகநூலில் ஏராளமான பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையின் சார்பாக இது போலியான முகநூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 21, 2025
தஞ்சை: போலி நகைகளை அடகு வைத்து மோசடி

திருவையாறு, கண்டியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் அடகு கடையில் போலி தங்க நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் காரைக்கால் பகுதியை சேர்ந்த சிவா(26), ஸ்ரீராம் (21) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
News December 21, 2025
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


