News December 16, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா விற்ற பெண் கைது!

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் பாவளம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சாந்தி (வயது 58) என்பவரது மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கடையில் போலீசார் சோதனை செய்ததில் ரூ.2,700 மதிப்பி–லான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News January 14, 2026
கள்ளக்குறிச்சியில் மாந்திரீக பூஜை? மர்ம நபர்கள் அட்டூழியம்!

கள்ளக்குறிச்சி: மேலப்பழங்கூரில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள கருப்பண்ண சாமி சிலையை நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அங்கு உடைந்த தேங்காய் மற்றும் பூக்களை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, யாரேனும் மாந்திரீகத்தில் ஈடுபட்டு, சிலைகளை சேதப்படுத்தினர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
ஆட்சியருக்கு மண்பானை வழங்கிய விசிக பெண் நிர்வாகி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்தை, நேற்று விசிக மாநில மகளிர் அணி செயலாளர் வேல்.பழனியம்மாள் சந்தித்தார். அப்போது, ஆட்சியரிடம் விசிக-வின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமான பானை மற்றும் பனை வெல்லம் கொடுத்து பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில் விசிக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
News January 14, 2026
கள்ளக்குறிச்சி: மாமியாரால் தூக்கில் தொங்கிய மருமகள்!

கள்ளக்குறிச்சி: தச்சூரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி சரண்யா (32). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வசந்தகுமார் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என மருமகள் சரண்யாவை மாமியார் தேவி நேற்று முன்தினம் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


