News December 16, 2025
புதுச்சேரி: மீனவரை வெட்டிய 8 வாலிபர்கள் கைது

புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே மீனவர் வெற்றிவேல் (45), மற்றும் மனைவி சசிகுமாரியை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாறியாக வெட்டி தாக்கினர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழிவாங்கும் நோக்கில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பூரணாங்குப்பத்தை சேர்ந்த 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மறியல் நடத்திய மீனவர்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர்.
Similar News
News December 29, 2025
புதுவை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
புதுவை: துணை ஜனாதிபதியை வரவேற்ற முதல்வர்

புதுச்சேரி விமான நிலையத்தில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வருகை தந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி வெள்ளி கலசம் வழங்கி மரியாதையுடன் வரவேற்றார். இவருடன் அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரியில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 29, 2025
புதுவை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


