News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
Similar News
News December 22, 2025
இந்தியா ஒரு இந்து நாடு: மோகன் பகவத்

பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு இந்து நாடு என்ற அவர், இதற்கும் அரசியல் ஒப்புதல் தேவையா என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியாவை தாய்நாடாக கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள். நாட்டின் மூதாதையர்களின் மகிமையை நம்பும் ஒரு நபர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு என்றார்.
News December 22, 2025
டிசம்பர் 22: வரலாற்றில் இன்று

*தேசிய கணித நாள்.
*1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில், உத்தராகண்டின் ரூர்க்கி நகரத்தில் இயக்கப்பட்டது.
*1887 – கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாள்.
*1964 – தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியை புயல் தாக்கியதில் 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
News December 22, 2025
புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன்: PV சிந்து

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அனைவருக்கும் உண்டு, 100% தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று PV சிந்து கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவு தான் அனுபவ வீராங்கனையாக இருந்தாலும் தொடர்ந்து புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதியிலேயே சிந்து வெளியேறியிருந்தார்.


