News December 16, 2025
திருவள்ளூர் கலெக்டர் தொடங்கினார்!

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதாப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Similar News
News December 20, 2025
திருவள்ளூர்: மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.19) ‘மரக்கன்றுகள் நடும் விழா’ சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆட்சியர் மு.பிரதாப் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும் வனத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News December 20, 2025
ஆவடியில் இன்றைய ரோந்து காவலர்களின் எண்கள்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் இன்று (19.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தீவிர இரவு ரோந்து நடைபெற உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் ரோந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலையில் தொடர்பு கொள்ள காவல் துறை வெளியிட்ட ரோந்து எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
News December 20, 2025
புதிய பல்நோக்கு கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.19) புதிய பல்நோக்கு கூட்டரங்கினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு கல்வெட்டினை திறந்து வைத்தார். உடன் ஆட்சியர் மு.பிரதாப், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர்கள் , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.


