News December 16, 2025
தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
தூத்துக்குடி: தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

செட்டியாபத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி – சத்தியா தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷயானா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் இந்த குழந்தை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டதாக கூறி அவரது தாயார் குலசை G.H-க்கு கொண்டுசென்றார். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குலசை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
தூத்துக்குடியில் மேலும் 5 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கூடுதலாக மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
News January 21, 2026
தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.21) கிழக்கு மண்டல பகுதி மக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


