News December 16, 2025

மதுரையில் பல இடங்களில் மின்தடை அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ்நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு (எம்.எச்.டி.ஆர்.எச். பிளாக்), TNSTC குடியிருப்பு (A முதல் H பிளாக்), போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், மகபூப்பாளையம் மேலும் பல இடங்களை அரிய<> இங்க க்ளிக்<<>> செய்யவும். மறக்காம இதுபற்றி தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்

Similar News

News January 21, 2026

மதுரை: சாலை விபத்தில் இளைஞர் பரிதாப பலி..!

image

திருவாதவூர் அருகே உள்ள பனங்காடியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மணிகண்டன்(21). நேற்று முன்தினம் மாலை இவர் டூவீலரில் மேலூர் மேலவளவு சாலையில் அதிவேகமாக சென்ற போது, சுக்காம்பட்டி அருகே வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 21, 2026

மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை..!

image

மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரிட்டாபட்டி, குன்னத்தூர், திருவாதவூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். SHARE IT..

News January 21, 2026

சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேருக்கே அனுமதி!

image

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது, இது இடைக்கால உத்தரவு; மலை உச்சியில் விழாவில் கலந்து கொள்ளும் கணக்கை காவல்துறை மற்றும் தொல்லியல் துறை முடிவு செய்யலாம்.

error: Content is protected !!