News December 16, 2025
தருமபுரி: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!

பொம்மிடி அருகே துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பையர்நத்தத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு வாகனங்களும் சாலையோரம் நின்று கொண்டிருந்த மணிமேகலை மற்றும் அவரது மகன் அன்பரசு மீதும் மோதின. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் சதாசிவம், கோவிந்தராஜ் உட்பட 5பேரும் படுகாயமடைந்தனர்.
Similar News
News December 19, 2025
தருமபுரியில் 12 பேர் மீது வழக்குபதிவு!

தருமபுரி, பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, SIR எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள் மீது நேற்று (டிச.18) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சத்தியநாதன்(46) விஜய குமார்(45) கோபிநாத்(41) பெருமாள்(38) உள்ளிட்ட 12 பேர் மீது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதாகவும் & பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பென்னாகரம் எஸ்.எஸ்.ஐ மாதையன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
News December 19, 2025
BIG NEWS: தருமபுரியில் 81,000 பேர் நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 பேரில் 81,515 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 6.34% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் கூறினார்.
News December 19, 2025
தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


