News April 29, 2024
சிசிடிவி கோளாறு குறித்து திமுக புகார் மனு

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா செயல்படாதது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. திமுக எம்.பி இளங்கோ அளித்த மனுவில், வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி ட்ரோன் கேமராக்களை இயக்க அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 173 சிசிடிவி கேமராக்களும், ஈரோட்டில் ஒரு சிசிடிவி கேமராவும் திடீர் கோளாறால் பழுதானது. பின்னர் உடனடியாகச் சரி செய்யப்பட்டது.
Similar News
News August 27, 2025
700 வருடங்களாக மக்களை காக்கும் எரிமலை கணேசன்!

எரிமலை வெடித்து மக்களை துன்புறுத்தாமல் இருக்க, 700 ஆண்டுகளாக ஒரு சிறு விநாயகர் சிலை காப்பாற்றி வருவது உங்களுக்கு தெரியுமா? இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவாவில் உள்ள ப்ரோமோ எரிமலையின் விளிம்பில் உள்ள விநாயகர் சிலையால் தான், இதுவரை எரிமலை வெடிக்கவில்லை என மக்கள் நம்புகின்றனர். எரிமலை குறித்து பயமின்றி மக்கள், விநாயகருக்கு பூ, பழம் சமர்ப்பித்து வழிபாடும் செய்து வருகின்றனர். SHARE IT.
News August 27, 2025
BREAKING: இளைஞர் கடத்தல்.. பிரபல தமிழ் நடிகை ஓட்டம்

ஐடி ஊழியர் கடத்தல் விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளார். எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும், லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, அந்த ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று, லட்சுமி மேனன் தரப்பு கடுமையாக தாக்கியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் தப்பி ஓட்டம்பிடித்துள்ளார்.
News August 27, 2025
பொது அறிவு வினா- விடை!

1. அஸ்வின் எந்த ஆண்டு IPL-ல் அறிமுகமானார்?
2. இந்தியாவில் முதல்முறையாக ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?
3. தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எவ்வளவு?
4. ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர்?
5. டைட்டானிக் கப்பல் மூழ்கிய ஆண்டு?
கேள்விகளுக்கு சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.