News December 16, 2025
திருச்சி: ரயில் மோதி பரிதாப பலி

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 17, 2026
திருச்சி: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

சோமரசம்பேட்டை அடுத்த தேனாச்சிகாட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). இவரது மனைவி பிரபாவதி (21). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் பொங்கல் வைப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ் தனது மனைவியை கடுமையாக திட்டியதில் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
திருச்சி: மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை

காட்டுப்புத்தூர் அடுத்த சூரம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (55). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விரக்தியில் ரவி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்ததில், கரூர் அரசு மருத்துவமனையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


