News December 16, 2025
எல்லா வீரர்களும் VHT-ல் விளையாட வேண்டும்: BCCI

விஜய் ஹசாரே கோப்பை(VHT) டிச.24-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் தேசிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே விராட், ரோஹித் VHT-ல் கலந்துகொள்ள பிசிசிஐ கூறியிருந்த நிலையில், இப்போது அது அனைவருக்கும் பொருந்தும் என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயஷ் ஐயருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
உலகின் மிக வெயிட்டான விலங்குகள்

உலகில் பெரிய உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இந்த விலங்குகளை நேரில் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். இவ்வளவு பெருசா என அசந்து போய்டுவீங்க. அந்த வகையில், அதிக எடைகொண்ட விலங்கு எதுவென்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த விலங்கை நேரில் பார்த்து இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 24, 2025
VHT: ஒரே நாளில் 22 சதங்களை அடித்து மிரட்டல்

விஜய் ஹசாரேவின் தொடக்க நாளான இன்று பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருந்தனர். நட்சத்திர வீரர்களான <<18659415>>ரோஹித்<<>>, விராட் தொடங்கி, இளம் நட்சத்திரங்களான வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், படிக்கல் என 22 பேர் ஒரே நாளில் சதம் அடித்துள்ளனர். இதில் ஒடிசா வீரர் ஸ்வாஸ்டிக் சமல் இரட்டை சதம் அடித்து மிரள வைத்தார். VHT தொடர் முதல் நாளில் இருந்தே அனல் பறக்க தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
News December 24, 2025
தமிழக பிரபலம் காலமானார்.. உருக்கமான அஞ்சலி

<<18649552>>மூத்த தமிழறிஞர் அருகோ<<>>, புற்றுநோய் பாதிப்பால் காலமானார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சீமான் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், வாழ்நாள் முழுவதும் தமிழ் தேசிய அரசியல் போராளியாக திகழ்ந்தவர் அருகோ என்றும் அவரது மறைவு தமிழ் தேசிய அரசியலுக்கு பேரிழப்பு எனவும் சீமான் உருக்கமாக தெரிவித்துள்ளார். அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் அருகோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


