News December 16, 2025

பாம்பன் பாலத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சாலை பாலத்தில் இன்று (டிச.15) இரவு 8:15 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News

News January 2, 2026

ராமநாதபுரம்: சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

image

பெரியபட்டினம் தக்வா தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாகச் சென்ற நாய் ஒன்று சிறுவனின் தாய் கண்ணெதிரே அவரை கடித்து குதறியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நாயை விரட்டி விட்டனர். சிறுவனை நாய் கடித்துக் குதறுவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரவியது. சிறுவன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News January 2, 2026

ராமநாதபுரம்: ஒரே நாளில் 100 பேர் கைது

image

தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், பேரூராட்சியின் தலைவர் மகன் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்கக் கோரியும் தொண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த ஏராாளமானோர் முற்றுகையிட்டனர். அனுமதி இல்லாமல் முற்றுகையிட்டதால் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

News January 1, 2026

ராமநாதபுரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராமநாதபுரம் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000472, 9445000473 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE செய்யவும்.

error: Content is protected !!