News December 16, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

Similar News

News December 26, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகரில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால், தற்போது<> கிங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைன் மூலம் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும். இத்தகவலை SHARE பண்ணி உதவுங்க

News December 26, 2025

விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை.!

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

சிவகாசி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

சிவகாசி அருகே திருத்தங்கல் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி கற்பகம் (58). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக மருத்துவம் பார்த்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார். வயிற்று வலி தீராததால் மனமுடைந்த இருந்த கற்பகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!