News December 16, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று டிசம்பர் 15 திங்கள் கிழமை இரவு 10 மணி முதல் நாளை டிசம்பர் 16 காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியாக திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் கொடைக்கானல், பழனி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

Similar News

News December 27, 2025

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

வடமதுரையில் வசமாக சிக்கிய 3 பேர்!

image

வடமதுரை அருகே பிலாத்து பகுதியில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது உப்புக்குளம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட மாயவன் (36, வாலிசெட்டிபட்டி), பெரிய பொன்னன் (28, மலைப்பட்டி), மணிமாறன் (26,வடமதுரை) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 27, 2025

திண்டுக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!