News December 16, 2025
நவோதயா பள்ளிகள்.. TN அரசுக்கு 6 வாரம் கெடு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரத்திற்குள் கண்டறிய TN அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது. ஹிந்தியை திணிப்பதால் இந்த பள்ளிகளை எதிர்ப்பதாக அரசு தெரிவிக்க, மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மத்திய அரசிடம் இருந்து கல்வி நிதி பெறுவதில் சிக்கல் இருந்தால், தமிழக அரசு அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 16, 2025
பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹750 மதிப்புள்ள அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என CM ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஜன.3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடங்கும் என தற்போது அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 16, 2025
ஈரோடு பரப்புரையில் வரலாறு காணாத பாதுகாப்பு: KAS

டிச.18-ல் ஈரோட்டில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் இதுவரை கண்டிராத பாதுகாப்புடன் இந்த பரப்புரை நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலா 40 கேமராக்கள், வாக்கி டாக்கிகள், 24 ஆம்புலன்ஸ்கள், 72 டாக்டர்கள், 120 நர்ஸ்கள், 3 தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் பாட்டில், நடமாடும் கழிவறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
News December 16, 2025
2026-ன் முதல் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியாகுமா?

சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன.6-ல் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், அது தொடர்பான கோப்புகள் லோக் பவனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


