News December 15, 2025
குளித்தலையில் மது விற்றவர்கள் அதிரடி கைது!

கரூர்: குளித்தலை கோட்டம் குளித்தலை, நங்கவரம், லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் மது விற்பனை செய்துள்ளனர். அங்கு சென்ற போலீசார் மது விற்ற பாப்பாத்தி (64), அய்யர் (55), ஆனந்த் (40), கருப்பசாமி (54), மூர்த்தி(47), பழனிச்சாமி (45), கருப்பன் (35) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 185 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 10, 2026
கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
BREAKING கரூர் துயரச் சம்பவம் செந்தில் பாலாஜி ஆஜராகிறார்!

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது; இது குறித்து ஊடகங்களில் முரணான தகவல்கள் வெளியான நிலையில், வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்
News March 10, 2026
கரூர்: குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!


