News December 15, 2025

மதுரையில் இதுபோன்ற பல தூண்களை காணலாம் – அறநிலையத்துறை

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில், மதுரையின் பல மலைகள், சமணர் மலை, மேலூர் என பல இடங்களில் தூண் உள்ளது என அறநிலையதுறை கூறியுள்ளது. நாகமலை, பசுமலை, அழகர்மலை, சித்தர்மலையிலும் இதுபோன்ற தூண்களை காணலாம். மதுரையை சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் தூண்களின் படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்ததுள்ளது. வரலாற்று ஆய்வாளர் சீனிவாசன் எழுதிய சமண தூண்கள் குறித்த புத்தகமும் சமர்ப்பிக்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

காந்தி மியூசியத்தில் இலவச தியான பயிற்சி

image

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச தியான தினமான டிசம்பர் 21 ல் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை உள் அமைதி உலகளாவிய நல்லிணக்கம் எனும் தலைப்பில் இலவச தியான பயிற்சி நடக்கிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம், முன்பதிவிற்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸை நேரிலோ 99941 23091 என்ற வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

மதுரை: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

image

மதுரை மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்காலம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News December 16, 2025

மதுரை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

image

ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரை பெருக்கும் வகையில், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதன் தாக்கம் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.அப்பகுதி மக்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!