News December 15, 2025
அரசு மருத்துவமனையில் மு.அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவனையில் இருக்கும் மருந்துகள் கையிருப்பு உள்ளிட்டவைகளை குறித்து அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
Similar News
News December 16, 2025
புதுகை: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!

புதுகை மாவட்டத்தில் புனித பயணம் மேற்கொள்ள 550 கிறிஸ்தவர்களுக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரீகள், அருட்சகோதரிகளுக்கு ரூ.60,000 ECS மூலம் நேரடியாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.bmcbmcw.tn.gov.in பதிவிறக்கம் செய்து 28.02.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் “ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-600005.” என்ற முகவரிக்கு அனுப்பும்படி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
News December 16, 2025
புதுகை: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி

திருமயம் அடுத்த துளையானூர் சாலையில் தர்மராஜ் (51) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த ராஜேஷ் (18) மோதியதில் படுகாயம் அடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஸ்ரீபிரியா (33) அளித்த புகாரின் பேரில் திருமயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


