News April 29, 2024

மே 5ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு

image

தென் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 7 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 1 வரை நெல்லை, குமரி மாவட்டங்களிலும், மே 2ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யலாம். இதேபோல, மே 3-5 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 8, 2026

ரயில்வேக்கு PM மோடி அட்வைஸ் கொடுக்கனும்: CM

image

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என PM மோடியை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், நில எடுப்பு, இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக தாமதமின்றி நிதியை விடுவிக்க CM கோரியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு கூடுதலாக புதிய திட்டங்களை வழங்கிட இந்திய ரயில்வேக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 8, 2026

மனதை லேசாக்கும் ஃபீல் குட் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

மனசு பாரமா இருக்கும் போது, கொஞ்சம் லேசாக்க ஃபீல் குட் படங்களை பார்த்து ரசிக்கலாம். அப்படி OTT-ல் பார்க்கக்கூடிய காலம் கடந்தும் பேசப்படும் சில ஃபீல் குட் படங்களை பட்டியலிட்டுள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கம் Swipe செய்து அந்த படங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லிஸ்ட்டில் இன்னும் வேறு எந்த படங்களை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க.

News February 8, 2026

குரூப்-2 தேர்வில் குளறுபடி.. தேர்வர்கள் போராட்டம்

image

TNPSC குரூப்-2 மெயின்ஸ் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சார் பதிவாளர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட 828 பணியிடங்களுக்கு 10,583 பேர் இன்று தேர்வு எழுத உள்ளனர். 10 மணிக்கு தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மையத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு ஹால்டிக்கெட் இருந்தும் இருக்கை இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!