News December 15, 2025
100 நாள் வேலை திட்டத்தை சின்னாபின்னமாக்கும் அரசு: CM

புதிய ‘VB-G RAM G’ திட்டத்தை கைவிட வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தி <<18571984>>100 நாள் வேலை<<>> திட்டத்தை பாஜக அரசு சின்னாபின்னமாக்குகிறது. 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே ஒதுக்குவார்கள் என்ற அவர், வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் TN-க்கு கிடைக்கும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
அஜிதா விவகாரத்தில் விஜய் செய்ய தவறியது: தமிழிசை

பெண்களுக்கு அரசியல் என்பது எப்போதும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தவெக நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்றதை பற்றி பேசிய அவர், விஜய் முன்னதாகவே அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும் என பேசியுள்ளார். மேலும், அஜிதா தற்கொலைக்கு முயன்றது கவலையளிப்பதாகவும் அவரது போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
மீண்டும் சாதிப்பாரா குகேஷ்?

FIDE உலக ரேபிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்குகிறது. மின்னல் வேக காய் நகர்த்தலுக்கு பெயர்போன இப்போட்டியில் 8 முறை பிளிட்ஸ் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி ஆகியோர் களமிறங்குகின்றனர். பட்டம் வெல்வோருக்கு ₹74 லட்சம் உட்பட மொத்தம் ₹10 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் அடுத்த கட்சி!

2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என CPM பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் பேட்டியளித்த அவர், திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சின்போது கூடுதல் தொகுதிகளை பெற முயற்சிப்போம் என குறிப்பிட்டார். ஏற்கெனவே காங்., விசிக அதிக சீட்டு பெற முயற்சிக்கும் நிலையில், CPM-மும் இவ்வாறு கூறியிருப்பது, திமுகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


