News December 15, 2025
சென்னையில் கொடூரம்!

நொளம்பூரில் மேரி (70) வசித்து வந்தார். இவர் வீட்டிலிருந்து நேற்று சத்தம் வர, சுற்றத்தார் பார்த்த போது மேரி மயங்கிய நிலையிலிருந்தார். அப்போது மேரி அருகிலிருந்த ஏழுமலையை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேரியை மருத்துமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்க, போலீசார் ஏழுமலையிடம் விசாரணை செய்ததில் குடிக்க பணம் இல்லையென, மேரியை நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது.
Similar News
News March 7, 2026
சென்னை டி.காபி விலை ஏற்றம் இல்லை

வணிக சிலிண்டர் விலை ஏற்றத்தால் டீ, காபி விலை ஏற்றம் செய்யப்படாது என பெருநகர சென்னை டீ, காபி கடை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் சிலிண்டர் விலை இன்று உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் சென்னையில் வழக்கமான விலையில் டீ, காபி விற்பனை செய்யப்படும் எனவும் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
News March 7, 2026
சென்னை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

சென்னை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
சென்னையில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

சென்னை மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!


