News December 15, 2025
பல்லியின் வால் எத்தனை முறை மீண்டும் வளரும் தெரியுமா?

பல்லிகள் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்தி தான் ‘ஆட்டோடோமி’ செயல்முறை. அதாவது வாலை துண்டித்து கொள்ளும் முறை. அப்படி துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் முழுமையாக வளர்ந்து விடும். இதை ரீஜெனரேஷன் என்கிறது அறிவியல். பல்லிகள் எத்தனை முறை வாலை துண்டித்தாலும், அது வளரும். அதற்கு எண்ணிக்கை வரம்பு இல்லை என்றாலும், பல்லியின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 19, 2025
சிம்புவின் ‘அரசன்’ படத்தில் ஆண்ட்ரியாவா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் ஷுட்டிங் கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆண்ட்ரியாவும் அரசனில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ‘வடசென்னை’ சந்திரா போட்டோவை ஆண்ட்ரியா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
News December 19, 2025
பாகிஸ்தான் தாதா CM நிதிஷ் குமாருக்கு மிரட்டல்

பிஹார் CM நிதிஷ்குமார் <<18575369>>பெண் டாக்டரின்<<>> ஹிஜாப்பை இழுத்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் நிதிஷுக்கு எதிராக சில சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த தாதா ஷெஹ்சாத் பட்டி நிதிஷுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
சச்சின் பொன்மொழிகள்

*நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை. *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.


