News December 15, 2025
தென்னை மரங்களுக்குக் காப்பீடு – ஆட்சியர் தகவல்

சிவகங்கையில் சுமார் 9127 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பயன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இந்த இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் தங்களுடைய தென்னை மரங்களுக்குக் காப்பீடு செய்து பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு வட்டாரத் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Similar News
News December 28, 2025
சிவகங்கை: இனி Whatsapp மூலம் தீர்வு!

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
சிவகங்கை: காலிப் பணியிடங்கள் அறிவிப்பு – கலெக்டர்

சிவகங்கை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தை உதவி மையத்தின் ஆற்றுப்படுத்துநா் ஒரு பணியிடம், வழக்குப் பணியாளா் ஒரு பணியிடம் ஆகியவை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 131, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
சிவகங்கை: டூவீலர் விபத்தில் இளம்பெண் பலி!

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஆதீஸ்வரன் மனைவி அருள்மொழி (30). இவர் இடைய வலசை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையில் நின்ற மண் அள்ளும் இயந்திரத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


