News December 15, 2025
இமயமலையில் புதைந்த CIA அணுசக்தி ரகசியம்!

1965-ல் சீனாவை உளவு பார்க்க, இந்தியாவின் உதவியுடன், இமயமலையில் புளூட்டோனியம் நிறைந்த SNAP-19C அணுசக்தி ஜெனரேட்டரை CIA நிறுவ முயன்றது. மோசமான வானிலையால் சாதனத்தை பாதுகாப்பாக வைத்து விட்டு திரும்பிய குழு, பின்னர் சென்று பார்த்தபோது காணாததால், பனிச்சரிவில் அடித்து செல்லப்பட்டதாக நம்பியது. ஆனால், இன்று வரை USA இதுபற்றி வாய்திறக்காத நிலையில், 60 ஆண்டுகளாக அந்த சாதனம் தீராத மர்மமாக புதைந்துள்ளது.
Similar News
News March 15, 2026
BIG BREAKING: அதிமுக கூட்டணியில் இணைகிறார்

நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் சற்றுநேரத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவிக்க உள்ளார். ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, தற்போது 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
தேர்தல் நடத்தை விதி என்றால் என்ன?

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) என்பது தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காக வகுக்கப்படும் வழிகாட்டுதல்கள் ஆகும். ECI தேர்தலை அறிவித்தவுடன் இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிடும். அரசு அதிகாரம், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்வது நடத்தை விதியின் முக்கிய நோக்கம்.
News March 15, 2026
சொந்த வாகனங்களுக்கான FASTag கட்டணம் உயர்கிறது

சொந்த வாகனங்களுக்கான வருடாந்தர FASTag கட்டணம் 2.5% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ₹3,000-லிருந்து ₹3,075 ஆக கட்டணம் உயர்கிறது. சொந்த கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே இக்கட்டண மாற்றம் பொருந்தும். வணிக ரீதியான வாகனங்களுக்கு தற்போதுள்ள கட்டண நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.


