News December 15, 2025
என்னிடம் ₹150 கோடி தாங்க.. 10 மெஸ்ஸியை உருவாக்குறேன்!

மெஸ்ஸியின் டூருக்காக செலவழித்த பணத்தை தாருங்கள், இந்தியாவுக்காக 10 மெஸ்ஸிகளை உருவாக்கி, WC-ஐ கொண்டு வருவேன் என பஞ்சாப் கால்பந்து இயக்குநர் ரஞ்சித் பஜாஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு வெளிநாட்டு ஸ்டார்கள் தேவையில்லை என குறிப்பிட்ட அவர், நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த இப்பணத்தை செலவழிக்கலாம் என கூறினார். மெஸ்ஸி டூருக்காக சுமார் ₹150 செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 26, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 26, 2026
PNG இணைப்புக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு

PNG இணைப்பை பெற விருப்பமுள்ள வணிக & தொழில்துறையினர் CGD நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என TN அரசு தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Torrent Gas: 1800-2125-6789), காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (AG&P/Think Gas: 1800-202-2999), திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Adani Total Gas: 079-47545252) தொடர்பு கொள்ளவும். இதர மாவட்டங்களுக்கு இந்த <
News March 26, 2026
தாமரைக்கு வாக்களித்து பாவம் செய்யாதீர்கள்: கருணாஸ்

தமிழக வரலாற்றில் பாஜகவுக்கு இவ்வளவு சீட் கொடுத்ததாக தனக்கு ஞாபகமில்லை என கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவிடம் சீட் வாங்கிய பாஜக, சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் நிற்க வைக்கிறது; தேர்தலுக்கு பிறகு அவர்களின் வாக்கு சதவீதத்தையும் தங்கள் கணக்கில் அது சேர்த்துவிடும் என விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து, பாவகாரியம் செய்து விடாதீர்கள் எனவும் எச்சரித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


