News December 15, 2025
வேலூரில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
Similar News
News December 25, 2025
வேலூர்: மது பதுக்கி விற்ற பெண் கைது!

வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வேலூர் சலவன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த கோதாவரி என்கிற பூங்கோதை (47) என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 25, 2025
வேலூர்: தொழிலாளி மர்ம மரணம்!

வேலூர் வசந்தபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). தொழிலாளியான இவர் நேற்று நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (டிச.24) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


