News December 15, 2025

திருவள்ளூர்: சட்டக் கல்லூரி மாணவி பலி!

image

திருவள்ளூர்: கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்த 18 வயது சட்டக்கல்லூரி மாணவி பாரதி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், தனது தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களுமே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News December 25, 2025

திருவள்ளூரில் ட்ரெக்கிங் போக செம ஸ்பாட்

image

திருவள்ளூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக குடியம் குகைகள் உள்ளது. வனத்துறை மூலம் அழைத்து செல்லப்படும் இந்த மலையேற்றம் மலையேற்றத்தோடு, தொல்லியல் சின்னங்களை பார்த்த அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில்,<> இந்த வலைத்தளத்தில் <<>>முன்பதிவு செய்து ட்ரெக்கிங் போகலாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க

News December 25, 2025

திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (25.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News December 25, 2025

குழந்தையை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை

image

பொன்னேரி அண்ணாமலைச்சேரியைச் சேர்ந்தவர்கள் அர்ஜுன் (31) பூஜா 25) திருமணமாகி 3 1/2 வருடம் ஆகிய நிலையில் ருத்விகா (3 மாதம்) என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கைகால் அசைவு இல்லாததால் மருத்துவர்கள்SMA எனப்படும் ஸ்பைனல் மஸ்குல்லர் அட்ரபி ஸ்டேஜ் 1 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரி செய்ய 16 கோடி ரூபாய் செலவாகும் ஆதலால் குழந்தையை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

error: Content is protected !!