News December 15, 2025

BJP-யையும் அரவணைப்போம், ஆனா ஒரு கன்டிஷன்: ரகுபதி

image

ஆள் இல்லாததால் அட்வான்ஸாகவே அதிமுக விருப்பமனு கேட்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். யாரும் கட்சியை விட்டு போகக்கூடாது என்பதால் அதிமுக முந்தியுள்ளதாக அவர் கூறினார். திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் எந்த கட்சியையும், ஏன் பாஜகவை கூட அரவணைப்போம் என ரகுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் எங்களது அடுத்த தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 14, 2026

ராஜீவ் காந்தியின் பதவி பறிப்புக்கு இதுவா காரணம்?

image

திமுக மாணவர் அணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, நேற்று திடீரென்று அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்திற்கு காரணம் வெளிவந்துள்ளது. கோவையில் ஒரு தொகுதியை குறிவைத்து நாய் நகர்த்திய அவர், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததும், இரவு நேரங்களில் கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு மேசேஜ் அனுப்பியதும் நீக்கத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

News March 14, 2026

BREAKING: டெல்லி செல்லும் விஜய்.. கூட்டணியில் திருப்பம்?

image

கரூர் வழக்கில் CBI-ன் விசாரணைக்காக விஜய், இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். ஏற்கெனவே 2 முறை நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளித்த நிலையில், 3-வது முறையாக ஆஜராக உள்ளார். முன்னதாக, நேற்று தவெக மா.செ.,-க்கள் கூட்டத்திற்கு பிறகு NDA-வில் இணைய விஜய் OK சொன்னதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த டெல்லி விசிட்டில் அவர், பாஜக தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 14, 2026

விஜய் முடிவால் கெத்து காட்டுவாரா சீமான்?

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தும் தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. இதனால் தவெக தனித்தே போட்டி என பேசப்பட்டது. இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக, அதிமுக கூட்டணியில் தவெக இணைய விஜய் இசைவு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது சாத்தியமானால், 2026 தேர்தலிலும் தனித்து நிற்கும் ஒரே கட்சி என்ற அடையாளத்தை நாதக மீண்டும் பெறும் என்று சீமான் விரும்பிகள் கூறுகின்றனராம்.

error: Content is protected !!